NEET Exam Row: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வருகிற ஒன்பதாம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
NEET Exam Row: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வருகிற ஒன்பதாம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Published on: April 4, 2025 at 5:08 pm
சென்னை, ஏப்ரல் 4 2025: நீட் தேர்வு முறையை அகற்றுவது தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 4 2025) உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், மருத்துவ துறையில் நாட்டிற்கே முன்னோடியாக திகழும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இங்கு நீட் தேர்வு முறை கொண்டுவரப்பட்ட பின்னர் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்களுக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு எட்டாக்கனி ஆகி விட்டது.
இந்த முறையானது நகரங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே ஆதரவாக அமைந்துள்ளது. இந்நிலையில் எனது தலைமையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய அரசின் மத்திய அரசின் சுகாதாரத் துறை ஆயுஷ் துறை உள்துறை உயர்கல்வித் துறை என பல்வேறு அமைச்சர்கள் கூறிய அனைத்து விளக்கங்களும் வழங்கப்பட்டது. இருப்பினும், இவை அனைத்தும் ஏற்காமல் மத்திய அரசின் நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ளது.
மத்திய அரசு நமது கோரிக்கையை நிராகரித்திருக்கலாம் ஆனால் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான தமது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வழியாக சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசிக்கப்படும்.
இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களிடம் கலந்துதாலோசனை கூட்டம் வருகிற ஒன்பதாம் தேதி மாலை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதில் அளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஏமாற்றவே நீட் தேர்வு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டி உள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், நீட் தேர்வை தங்களால் ரத்து செய்ய முடியாது என கூறிவிட்டு பின்னர் ஏன் கூட்டம் கூட்ட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க எம்புரான் பட தயாரிப்பாளர் சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: யார் இந்த கோகுலம் கோபாலன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com