மாலை பப்பாளி பழம் சாப்பிட்ட மனோஜ்.. டீ கேட்ட நிலையில்.. சித்தப்பா உருக்கம்!

Manoj Bharathiraja Death: நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மரணம் தமிழக திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அன்றைய தினம் நடந்தது என்ன..? சித்தப்பா ஜெயராஜ் பேட்டி.

Published on: March 31, 2025 at 4:34 pm

சென்னை மார்ச் 31 2025: தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயம் என அனைவராலும் பாராட்டப்படுபவர் டைரக்டர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ். மனோஜ் பாரதிராஜாவுக்கு சினிமா மீது தீராத காதல். ஒரு இயக்குனராக வெற்றி பெற வேண்டும் என நினைத்தார். அதாவது தனது தந்தையைப் போல் சினிமாவில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என நினைத்தார்.

இந்த ஆசையில் படிப்பை பாதியில் விட்ட மனோஜ், இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். பம்பாய் படத்தின் போது இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதற்கிடையில் மனோஜ் கதாநாயகனாக தாஜ்மஹால் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் அறிமுக பாடல் மிகவும் ஹிட் அடித்தது.. பட்டித் தொட்டியெங்கும் தற்போது வரை ஒலிப்பதை நாம் பார்க்கலாம்.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு மனோஜ் பாரதிராஜா, அல்லி அர்ஜுனா, சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ரஜினியின் எந்திரன் திரைப்படத்திலும் சிட்டி ரோபோ ஆக, மனோஜ் நடித்திருந்தார். இந்த நிலையில் மனோஜ் கடந்த வாரம் திடீரென உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்ததாக கூறப்பட்டது.

மனோஜ் மரணம்; அன்று வீட்டில் நடந்தது என்ன?

மனோஜ் மரணம் பாரதிராஜா குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ளது. தனது ஒரே மகனை இழந்த பாரதிராஜா மனவேதனையில் தவிக்கிறார். இந்த நிலையில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் (மனோஜ் சித்தப்பா) உருக்கமாக மனோஜின் மரணம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், “மரணம் நிகழும் முன் மனோஜ் வீட்டில் சாதாரணமாக இருந்தார். மாலை பப்பாளி பழம் சாப்பிட்டுள்ளார்; தொடர்ந்து குடிக்க ஒரு டீ கேட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. அவருக்கு சமீபத்தில் இதய பிரச்சனை இருந்தது. இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு எல்லாம் சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால், மனோஜ் இந்த வயதில் போய் விட்டான்; மனோஜ் இருதய அறுவை சிகிச்சையின் போது தனக்கு இந்த சிகிச்சை செய்யப்பட வேண்டாம் என தெரிவித்தார். அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததா என தெரியவில்லை. அதனை அவன் மறைத்தானா என்றும் தெரியவில்லை” என்று உருக்கமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க; யார் இந்த சுருதி நாராயணன்?வீடியோ சர்ச்சையில் சிக்கிய தமிழ் நடிகை!

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல் காங்கிரஸ்!
Rahul Gandhi

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com