திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை கிராமத்தில் 1000 குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதி திருவாங்கூர்-கொச்சி சமாதான ஆளுகையின் கீழ் வனப்பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
February 6, 2025
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை கிராமத்தில் 1000 குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதி திருவாங்கூர்-கொச்சி சமாதான ஆளுகையின் கீழ் வனப்பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published on: August 30, 2024 at 12:14 am
Updated on: August 30, 2024 at 11:22 am
Tirunelveli Mancholai issue | மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆக.22ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார். தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் விஜயா பாரதி சயானியை சந்தித்து இந்தப் புகாரை அளித்திருந்தார்.
புதிய தமிழகம் புகார்
அந்தப் புகாரில், “திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை கிராமத்தில் 1000 குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதி திருவாங்கூர்-கொச்சி சமாதான ஆளுகையின் கீழ் வனப்பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1929 ஆம் ஆண்டில், இக்கிராமம், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனமான பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (BBTCL) நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
இந்த குத்தகை காலாவதி தேதி 2028வரை உள்ளது.
பட்டியலின மக்கள்
எனினும் மாஞ்சோலையில் உள்ள கிராம மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தேயிலை, காபி மற்றும் மிளகு உற்பத்திகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், “கிராமத்தை காலி செய்யும் நோக்கில், மின் மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன.
ஆகவே,மாஞ்சோலை கிராமத்தின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து, உண்மையான நீதியை வழங்க ஒரு உயர்மட்டக் குழுவை நியமிக்க வேண்டும். மேலும், மதுரை உயர் நீதிமன்றம் நிலுவையில் உள்ள மனுக்களைக் கண்காணித்து, எந்த தொழிலாளியையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றக்கூடாது என்று கூறியுள்ளது.
5 தலைமுறை பூர்விகம்
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் 3 முதல் 5 தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர்” எனத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ண சாமி, “தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) இந்தப் பிரச்சினையின் தீவிரத்தன்மையை கவனத்தில் கொண்டு இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி 4 வாரங்களுக்குள் தங்களின் ஆலோசனை மற்றும் தீர்வுகளை ஆணையத்திடம் சமர்பிக்க உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க அண்ணாமலை லண்டன் பயணம்: வீடியோ வெளியிட்டு கலாய்த்த செல்லூர் ராஜூ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com