History of iron use in Tamil Nadu: இரும்பு பயன்பாட்டின் தமிழக வரலாறு தொடர்பான தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார்.
History of iron use in Tamil Nadu: இரும்பு பயன்பாட்டின் தமிழக வரலாறு தொடர்பான தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார்.
Published on: March 18, 2025 at 10:55 am
Updated on: March 18, 2025 at 12:44 pm
புதுடெல்லி மார்ச் 18, 2025: அறிவியல் சரிபார்ப்புப்பணி முடிந்ததும் இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மைச் சான்றை உலக அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் திங்கள்கிழமை (மார்ச் 17, 2025) கேள்வி நேரத்தின்போது கலாசார அமைச்சரிடம் துணைக்கேள்வி ஒன்றை கேட்டார்.
அதாவது, “தமிழ்நாட்டின் சிவகளையில் சமீபத்தில் கிடைத்த தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் இரும்பு யுகம் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. கங்கை சமவெளிகளின் இரும்பு உருக்குதலுக்கு முன்பே கி.மு.2172 க்கு முந்தையது இது என்பதை அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்து, அங்கு ஒரு வரலாற்று அருங்காட்சியகத்தை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
இதுபோல் மத்திய அரசும் இதனை அங்கீகரித்து, உலக அளவில் கொண்டு செல்லுமா?” என கேட்டார்.
இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் பதில் அளித்தார். அப்போது, தமிழத்தின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி ஊடகங்கள் மூலம் அறிந்து இருக்கிறோம் இந்த கண்டுபிடிப்பு பற்றி தமிழக முதல்-அமைச்சரும் சொல்லி இருந்தார். இதற்கான அறிவியல் சரிபார்ப்புப்பணி நடந்துகொண்டு இருக்கிறது. சரிபார்ப்புப்பணி முடிந்ததும் உலக அளவில் அதனை கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றார்.
இதையும் படிங்க: நாக்பூர் ஒளரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்: வன்முறை பதற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com