Nagpur Aurangzeb’s tomb: முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற கோரி நாக்பூரில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இது இரு சமூகங்களுக்கு இடையே பதற்றத்தையும் மோதல்களையும் ஏற்படுத்தியது.
Nagpur Aurangzeb’s tomb: முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற கோரி நாக்பூரில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இது இரு சமூகங்களுக்கு இடையே பதற்றத்தையும் மோதல்களையும் ஏற்படுத்தியது.
Published on: March 18, 2025 at 10:27 am
நாக்பூர், மார்ச் 18, 2025: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் கணேஷ்பேத், மஹால் மற்றும் காந்திபாக் பகுதிகளில் திங்கள்கிழமை (மார்ச் 17, 2025) பிற்பகல் பதற்றம் வெடித்தது. ஔரங்கசீப்பின் கல்லறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது.
அப்போது, கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து காவல்துறையினரின் கூற்றுப்படி, போராட்டத்தின் போது முஸ்லிம் சமூகத்தின் புனித நூலை எரித்ததாக வதந்தி அப்பகுதியில் பரவியது. இதனால், பதற்றம் அதிகரித்தது. பஜ்ரங் தள ஆர்ப்பாட்டத்தின் வீடியோக்கள் வைரலானது. இது இரு சமூகங்களுக்கிடையில் சீற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
பிரச்னைக்கு காரணம் என்ன?
கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பலர் காயமடைந்தனர். சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள குல்தாபாத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் (VHP) மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக, சமாஜ்வாதி கட்சி எம்.பி. அபு ஆஸ்மி முகலாய பேரரசரைப் புகழ்ந்து அறிக்கைகளை வெளியிட்டதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஔரங்கசீப் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த அதிவிரைவு படை, கலவரக் கட்டுப்பாட்டு போலீசார் மற்றும் மாநில ரிசர்வ் போலீஸ் படை (SRPF) சம்பவ பகுதியில் குவிக்கப்பட்டனர்.
போலீஸ் எச்சரிக்கை
இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகரத்தின் பிற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ரவீந்தர் சிங்கால் கூறுகையில், “நாங்கள் சம்பவ இடத்திலேயே இருக்கிறோம், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல், “இது முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் நகரம். இந்த நகரத்தில் இவ்வளவு பதற்றம், கல்வீச்சு மற்றும் தீ வைப்பு வெடித்துள்ளது.
இது மாநில அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வியை குறிக்கிறது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக, மாநில அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் வேண்டுமென்றே சமூக முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்” என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க : பீகாரில் பரபரப்பு: அரசியலில் குதிக்கிறார் நிதிஷ் குமார் மகன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com