Dharmendra Pradhans father passes away: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை திங்கள்கிழமை மரணம் அடைந்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Dharmendra Pradhans father passes away: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை திங்கள்கிழமை மரணம் அடைந்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Published on: March 18, 2025 at 10:55 am
புதுடெல்லி, மார்ச்.18 2025: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான தேபேந்திர பிரதான் டெல்லியில் திங்கள்கிழமை (மார்ச் 17, 2025) காலமானார். அவருக்கு வயது 84. டெல்லியில் தர்மேந்திர பிரதான் வீட்டில் வசித்து வந்த அவர் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில், அவரது மறைவுச் செய்தியை அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தேபேந்திர பிரதான் கடின உழைப்பாளி. பணிவான தலைவராக முத்திரை பதித்தவர்.
இதையும் படிங்க : டெல்லியில் சிறுமி உள்பட 7 வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் கைது: நாடு கடத்த நடவடிக்கை!
Dr. Debendra Pradhan Ji made a mark as a hardworking and humble leader. He made numerous efforts to strengthen the BJP in Odisha. His contribution as MP and Minister is also noteworthy for the emphasis on poverty alleviation and social empowerment. Pained by his passing away.… pic.twitter.com/5z1kvX8vls
— Narendra Modi (@narendramodi) March 17, 2025
ஒடிசாவில் பா.ஜனதாவை வலுப்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சராக வறுமை ஒழிப்பு மற்றும் சமூக அதிகாரமளிப்புக்கான அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனை அடைந்தேன். இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டேன். ஓம் சாந்தி” என குறிப்பிட்டு உள்ளார்.
இதைப்போல ஜனாதிபதி திரவுபதி முர்மு, நிதின் கட்காரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மருத்துவரான தேபேந்திர பிரதான் ஆர்.எஸ்.எஸ்.சில் ஈடுபாடு கொண்டு அரசியலுக்கு வந்தவர். ஒடிசா மாநில பா.ஜனதா தலைவராக இருந்துள்ள இவர், வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆவார்.
இதையும் படிங்க : நாக்பூர் ஒளரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்: வன்முறை பதற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com