Rs 908 crore notice to MP Jagathrakshakan | திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக FEMA (Foreign Exchange Management Act) வழக்கில், ரூ. 908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
FEMA அதிகாரிகள் 2020 செப்டம்பர் 11-ஆம் தேதியன்று திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவரது குடும்ப உறுப்பினர்களும் வைத்திருந்த ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை தற்காலிகமாக பறிமுதல் செய்தனர்.
ஆனால், 2021 பிப்ரவரி 3-ஆம் தேதி Competent Authority இந்த பறிமுதல் கட்டளையை ரத்து செய்தது. அமலாக்கத் துறை இதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, 2021 டிசம்பர் 1-ஆம் தேதியன்று FEMA பிரிவு 16-க்கு கீழ் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. அதில், 2017-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ரூ. 42 கோடி முதலீடு மற்றும் இலங்கையில் ரூ. 9 கோடி முதலீடுகள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இதில், 2024 ஆகஸ்ட் 26-ஆம் தேதியன்று, FEMA விதிகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றிய பிறகு, சொத்துப் பறிமுதல் மற்றும் ரூ. 908 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க லண்டன் புறப்பட்டார் அண்ணாமலை: தமிழக பா.ஜ.க.வில் அடுத்து என்ன?
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/