Aamir Khans new girlfriend: அமீர் கானின் புதிய காதலி கெளரி யார் தெரியுமா? இவர் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
Aamir Khans new girlfriend: அமீர் கானின் புதிய காதலி கெளரி யார் தெரியுமா? இவர் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
Published on: March 15, 2025 at 1:57 pm
மும்பை, மார்ச் 15, 2025: பாலிவுட் நட்சத்திரம் அமீர் கான் தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு உரையாடலின் போது தனது காதலி கௌரி ஸ்ப்ராட்டை அறிமுகப்படுத்தினார். அப்போது, அவரது தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொண்ட அமீர் கான், அவர்களின் உறவு பற்றிய விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.
இவர்கள் ஒருவருக்கொருவர் 25 ஆண்டுகளாக அறிந்திருக்கிறார்கள். மேலும், ஒரு வருடத்திற்கு முன்பு டேட்டிங் செய்யத் தொடங்கினர் என்பதை வெளிப்படுத்தினார். பெங்களூரைச் சேர்ந்த கௌரி ஸ்ப்ராட், ஆறு வயது மகனுக்குத் தாய் ஆவார். லண்டனில் உள்ள கலைப் பல்கலைக்கழகத்தில் படித்த அவருக்கு ஃபேஷன், ஸ்டைலிங் மற்றும் புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பின்னணி உள்ளது.
மேலும், இவர் தமிழ் மற்றும் ஐரீஷ் பாரம்பரியத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவரின் தாத்தா சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இந்த நிலையில், அமீர் கான் தனது உரையாடலின் போது, ஒருவருக்கொருவர் உறுதியுடன் இருப்பதாகவும், ஒன்றாக வாழ்வதாகவும் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், மார்ச் 12 அன்று தனது வீட்டில் பிறந்தநாளுக்கு முந்தைய விருந்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் ஷாருக்கானுக்கும் ஸ்ப்ராட்டை அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், கெளரி லகான் மற்றும் தங்கல் உட்பட அவரது சில படங்களை மட்டுமே பார்த்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அமீர் கான், இதற்கு முன்பு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெறுவதற்கு முன்பு அவர் ரீனா தத்தாவுடன் 16 ஆண்டுகள் இருந்தார். அவர்களுக்கு ஈரா மற்றும் ஜுனைத் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அமீர் கான் 2005இல் திரைப்பட தயாரிப்பாளர் கிரண் ராவை மணந்தார், மேலும் 2021 இல் அவர்கள் பிரிந்தனர். அவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார்.
இதையும் படிங்க நடிகர் சிரஞ்சீவிக்கு புதிய கவுரவம்.. இங்கிலாந்து வாழ்நாள் சாதனையாளர் விருது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com