Anbucholai centres: தமிழ்நாட்டில் 25 அன்பு சோலை மையங்கள்: தங்கம் தென்னரசு அறிவிப்பு

Tamil Nadu Budget 2025: பட்ஜெட் தாக்கலின் போது, முதுமை என்பது மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத கட்டமாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், தமிழக அரசு 25 அன்புச்சோலை மையங்களை ஏற்படுத்தும் என்றார்.

Published on: March 14, 2025 at 12:30 pm

சென்னை, மார்ச் 14, 2025: முதியோர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக தமிழக அரசு 25 அன்புச்சோலை மையங்களை (முதியோருக்கான பகல்நேர பராமரிப்பு மையங்கள்) அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பட்ஜெட் தாக்கலின் போது தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “முதுமை என்பது மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத கட்டமாகும். மேலும் இது பெரும்பாலும் தனிமை, மருத்துவ பராமரிப்பு மற்றும் நிதி சார்ந்திருத்தல் போன்ற சவால்களுடன் சேர்ந்துள்ளது” என்றார்.

அந்த வகையில், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட நகராட்சிகளில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் ‘அன்புச்சோலை’ மையங்கள் நிறுவப்பட உள்ளது.

இந்த பகல்நேர பராமரிப்பு மையங்களில், முதியவர்கள் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். ஒவ்வொரு ‘அன்புச்சோலை’ மையமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் பகல்நேர பராமரிப்பு உதவி, அத்தியாவசிய மருத்துவ பராமரிப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாடு பட்ஜெட் 2025: புதிய உச்சம் தொட்ட தங்கம்.. இன்றைய விலை!

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு.. மீண்டும் இ-பாஸ்.. சுற்றுலாப் பயணிகள் நோட் பண்ணுங்க!
mandatory e pass for vehicles going to Ooty and Kodaikanal

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு.. மீண்டும் இ-பாஸ்.. சுற்றுலாப் பயணிகள் நோட்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com