மாமன்னர் பூலித்தேவன் ஜெயந்தியை முன்னிட்டு செப்.1ஆம் தேதி டி.டி.வி தினகரன் நெல்கட்டான் செவல் வருகிறார்.
February 6, 2025
மாமன்னர் பூலித்தேவன் ஜெயந்தியை முன்னிட்டு செப்.1ஆம் தேதி டி.டி.வி தினகரன் நெல்கட்டான் செவல் வருகிறார்.
Published on: August 28, 2024 at 4:26 pm
Updated on: August 28, 2024 at 4:27 pm
Pulithevan Jayanti | மாமன்னர் பூலித்தேவன் ஜெயந்தி நன்நாளில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செப்.1ஆம் தேதி நெல்கட்டான் செலவ் வருகிறார்.
இது குறித்து அ.ம.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செப்டம்பர் 1ஆம் தேதி நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தென்னாட்டில் முதல் விடுதலைப் போர் முரசு கொட்டியவரும், ஒப்பற்ற போர் திறமையாலும், அரசியல் கூர்மையினாலும் போர்க்களத்தில் தன்னிகரற்ற மாவீரராக திகழ்ந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் ஜெயந்தி விழா 01.09.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தென்காசி மாவட்டம், நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அன்று காலை 10:00 மணியளவில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com