Annamalai London Visit | தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் புறப்பட்டு சென்றார்.
February 6, 2025
Annamalai London Visit | தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் புறப்பட்டு சென்றார்.
Published on: August 28, 2024 at 11:30 am
Updated on: August 28, 2024 at 11:34 am
Annamalai London Visit | தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் புறப்பட்டு சென்றார். அவருக்கு மாநில நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் லண்டனுக்கு கல்வி கற்க செல்லும் திட்டத்தை அண்ணாமலை அறிவித்தார். அப்போது இது பலராலும் விமர்சிக்கப்பட்டது.
‘துரைமுருகன் என் நீண்ட கால நண்பர்; விஜய்க்கு வாழ்த்துகள்’: ரஜினிகாந்த்
லண்டன் புறப்பட்டார் அண்ணாமலை
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பிரச்னை நிலவுவதாகவும், இதனால் அண்ணாமலை வெளிநாடு செல்கிறார் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையில் அண்ணாமலையின் லண்டன் பயணம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று அண்ணாமலை லண்டன் புறப்பட்டு சென்றார்.
தமிழக பா.ஜ.க.வில் மாற்றம்?
அவர் அங்கு சர்வதேச அரசியல் குறித்து கல்வி கற்க உள்ளார். லண்டன் செல்ல சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு கட்சி நிர்வாகிள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பா.ஜ.க நிர்வாகி கரு. நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அண்ணாமலை லண்டன் புறப்பட்ட நிலையில், தமிழக பா.ஜனதா கட்சியில் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா? அல்லது அண்ணாமலை லண்டனில் இருந்தே கட்சிப் பணிகளை தொடர்வாரா? டெல்லி தலைமையின் முடிவு என்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com