1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தால் தமிழக மீனவர்கள் பாதிப்பு.. கவர்னர் ஆர்.என் ரவி!

1974 Katchatheevu Agreement: 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தால் தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என கவர்னர் ஆர் என் ரவி கூறியுள்ளார்.

Published on: March 2, 2025 at 4:40 pm

Updated on: March 2, 2025 at 10:16 pm

ராமேஸ்வரம் மார்ச் 2, 2025: கவர்னர் RN ரவி ராமேஸ்வரத்திற்கு இன்று (மார்ச் , 2 2025) சென்றிருந்தார். அப்போது தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சந்தித்து உரையாடினார். இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” ராமேஸ்வரத்திற்கு கவர்னர் சென்றிருந்தபோது துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளை சந்தித்தார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க ‘2006 இல் கலைஞர் ஆட்சி தொடரும் என்றார் வடிவேல்.. ஊத்திக்கிச்சு’.. செல்லூர் ராஜு!

மேலும் 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் குறித்து கவர்னர் RN ரவி, 1974 ஆம் ஆண்டு அநியாயமான ஒப்பந்தத்தால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவு சுற்று வட்டார கடல் பகுதிகளில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பறிப்பதன் மூலம் மத்தியிலும் மாநிலத்திலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இளைத்தன. வண்டில இருந்து இன்றுவரை நமது மீனவ சமூகம் தொடர் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை. இதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசை குறை கூறாமல் மாநில அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். இது மீனவ சொந்தங்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெருமளவு உதவும்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து 1974 ஆம் ஆண்டு நடந்த ஒப்பந்த தவறுக்கு சமபருப்பு அன்றைய மத்திய ஆட்சிக் கூட்டணியிலிருந்து இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது என திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க இதனை நம்பவோ, ஏற்கவோ வேண்டாம்.. TVK தொண்டர்களுக்கு ஆனந்த் உத்தரவு!

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு.. மீண்டும் இ-பாஸ்.. சுற்றுலாப் பயணிகள் நோட் பண்ணுங்க!
mandatory e pass for vehicles going to Ooty and Kodaikanal

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு.. மீண்டும் இ-பாஸ்.. சுற்றுலாப் பயணிகள் நோட்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com