மராட்டியத்தில் நர்சிங் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
மராட்டியத்தில் நர்சிங் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: August 27, 2024 at 6:34 am
நர்சிங் கல்லூரி முடிந்து ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பிய கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்துவரும் மாணவி, கல்லூரி மாணவி படிப்பு முடிந்து ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை முட்புதரில் வீசி சென்றுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட நர்சிங் மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தலைமறைவான ஆட்டோ ரிக்ஷா டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதற்கிடையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி, மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண்ணின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில வாரங்களில் மராட்டியத்தில் நர்சிங் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூரிலும் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 17 வயது சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com