Actress Shruti Haasan: தான் போலியான பெயரை பயன்படுத்தியது ஏன் என சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
Actress Shruti Haasan: தான் போலியான பெயரை பயன்படுத்தியது ஏன் என சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
Published on: February 26, 2025 at 11:44 am
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் தந்தையைப் போல் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் சுருதிஹாசன். இந்த படத்தில் சுருதிஹாசன் உடன் நடித்தது குறித்து பேசிய நடிகர் சூர்யா, ” அவர் நடந்து வரும்போது கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது” என்றார்.
அதன் பின்னர் சுருதிஹாசன் தனுஷின் 3, அஜித் குமாருடன் வேதாளம், விஜயுடன் புலி, விஷாலுடன் பூஜை என தமிழ் படங்களில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது கமல்ஹாசனின் நண்பரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் உடன் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக இந்த படம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நடிகை சில்க் சுமிதா மிகச்சிறந்த பெண்மணி.. நடிகர் ஜி எம் குமார்!
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை பற்றிய ஓர் ரகசியத்தை நடிகை சுருதிஹாசன் வெளிப்படுத்தி உள்ளார். அது வேறு ஒன்றும் இல்லை அவர் போலியான பெயர்களில் நடமாடுவாராம். உலகப் புகழ்பெற்ற கமல்ஹாசனின் மகள் என்பதால் அவரால் வெளியில் எளிதில் செல்ல முடியவில்லை. யாராவது அவரை அடையாளம் கண்டுவிட்டால் நீங்கள் கமல்ஹாசனின் மகள்தானே என கேட்பார்களாம்.
இதனால் தனி உரிமை கருதி, சில நாட்கள் போலியான பெயரை உருவாக்கி அந்தப் பெயரில் வெளியில் சுற்றுவேன் என அவரே கூறியுள்ளார். நடிகை சுருதிஹாசனின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால் கமல்ஹாசனுக்கு பின்பு நடிகை சுருதிஹாசனும் திரை வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பின்னர் அவரால் அடையாளத்தை மறைக்க முடியவில்லை. அதாவது சுருதிஹாசன் கமல்ஹாசன் மகளாக இருக்கும்போது, திரைத்துறையில் நடிப்பதற்கு முன்பு இப்படி போலியான பெயர்களை உருவாக்கி சுற்றிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரகாட்டகாரன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை.. யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com