Income Tax Bill 2025: வருமான வரி மசோதா 2025 ஏப்ரல் 1, 2026 முதல் அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், எஸ்.டி.சி.ஜி-யில் எந்த மாற்றங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Income Tax Bill 2025: வருமான வரி மசோதா 2025 ஏப்ரல் 1, 2026 முதல் அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், எஸ்.டி.சி.ஜி-யில் எந்த மாற்றங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Published on: February 12, 2025 at 2:02 pm
Updated on: February 12, 2025 at 6:35 pm
வருமான வரி மசோதா 2025 எனப்படும் புதிய வருமான வரி மசோதா அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மசோதாவில் 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் கொண்டவையாக இருக்கும் என அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், மதிப்பீட்டு ஆண்டு, நிதி ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டு ஆகிய வார்த்தைகளை வரி ஆண்டு என்ற ஒரே ஒரு வார்த்தையால் மாற்ற இந்த மசோதா முன்மொழிகிறது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
வரி ஆண்டு என்பது ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கும் 12 மாத நிதிக் காலத்தை வரையறுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, குறுகிய கால மூலதன ஆதாயங்கள் (எஸ்.டி.சி.ஜி) வரி காலம் மற்றும் விகிதத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961, மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. மொழியில் சிறந்த தெளிவுக்காக சமீபத்திய வருமான வரி மசோதாவில் இது 536 உட்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.50 ஆயிரம் முதலீடு, 1.76 லட்சம் ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com