Uttar Pradesh cow smugglers: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பசு கடத்தல்காரர்கள் இருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Uttar Pradesh cow smugglers: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பசு கடத்தல்காரர்கள் இருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published on: February 11, 2025 at 2:08 pm
உத்தப் ரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11, 2025) காலை பசு கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதாவது, போலீசாருடன் நடந்த மோதலைத் தொடர்ந்து பசு கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையில் இரண்டு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், காயமடைந்த கடத்தல்காரர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை இடைப்பட்ட இரவில் சிட்வானா கிராமத்தின் காட்டில் பசு ஒன்று கொல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில், இரண்டு போலீசார் பசு கடத்தல்காரர்கள் பயணித்த காரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள் எனக் கூறப்படுகிறது.
போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு கடத்தல்காரர்கள் தலா என்ற நவீத் மற்றும் மினாஜ் என்ற சோட்டா எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசாருடனான மோதலில் அவர்கள் இருவரும் காயமடைந்தனர். தற்போது, இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலா ஒரு கைத்துப்பாக்கி வைத்துள்ளார். அவரின் காரில் விலங்குகளை வெட்டும் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, இவர்கள் இருவரும் ஜுனைத் மற்றும் ஆரிஃப் ஆகியோருடன் சேர்ந்து காட்டில் பசுவை கொன்றதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க கும்பமேளா பக்தர்கள் 9 பேர் விபத்தில் உயிரிழப்பு.. ஆந்திரா யாத்ரீகர்கள் 7 பேர் பலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com