How to make Bread Roll : குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் பிரட் ரோல் ரெசிபி எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
How to make Bread Roll : குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் பிரட் ரோல் ரெசிபி எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: February 9, 2025 at 11:24 am
அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய மொறுமொறுப்பான பிரட் ரோல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரட் -6
உருளைக்கிழங்கு -3
வெங்காயம் -1
பச்சை மற்றும் சிவப்பு குடைமிளகாய் -½ கப்
துருவிய கேரட் -1
பச்சை மிளகாய் -2
உப்பு-1 டீஸ்பூன்
சீரகத்தூள் -1 டீஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் -1 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் -1 டீஸ்பூன்
மிளகு தூள் -½ டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி அளவு
சோள மாவு -3 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பிரட்டின் நான்கு விளிம்பு பகுதியையும் நீக்கிவிட வேண்டும். பிரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக பல்ஸ் மோடில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அவித்த உருளைக்கிழங்கினை மசித்து சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மற்றும் சிவப்பு குடைமிளகாய், துருவிய கேரட், விதை நீக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், சில்லி பிளக்ஸ், சாட் மசாலா, மிளகுத்தூள், கரம் மசாலா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இந்த கலவையை நன்கு பிசைந்து திரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உள்ளங்கையில் சிறிது எண்ணெய் தடவி தயார் செய்து வைத்த பிரட் கலவையினை நீலவாக்கில் உருளை போன்று ரோல் செய்ய வேண்டும். அனைத்து மாவையும் இதே போன்று தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் மூன்று டீஸ்பூன் சோள மாவு எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தட்டில் பிரட் கிரம்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் செய்து வைத்த பிரட் ரோலை சோளமாவில் டிப் செய்து பின்னர் பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுக்க வேண்டும். இதேபோன்று அனைத்து பிரட் ரோலயும் பிரட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்த பிரட் ரோலினை சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். இப்போது கிரிஸ்பியான பிரட் ரோல் தயார். இதை டோமேட்டோ கெட்சப், மயோனஸ், புதினா சட்னி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க செம்ம டேஸ்டா சென்னா மசாலா.. இப்படி செஞ்சு அசத்துங்க !
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com