பெண்ணுக்கு மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியுமா?
பெண்ணுக்கு மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியுமா?
Published on: August 25, 2024 at 12:54 pm
Updated on: August 25, 2024 at 1:33 pm
பெண்ணுக்கு மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்? மச்ச சாஸ்திரம் கூறுவது என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம். மச்ச சாஸ்திரம் ஒருவரின் குணநலன்கள் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறித்து கூறுகிறது. இதனால் மக்கள் இதனை நம்புகின்றனர்.
மேலும் இதில் சாமுத்ரிகா லட்சணமும் கூறப்படுகிறது. இந்த சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒரு இடங்களில் இருக்கும் மச்சங்கள் குறித்து கூறுகிறது. இது பெரும்பாலும் கண்ணுக்கு தெரியாத இடத்தில் இருக்கும் மச்சங்கள் குறித்து கூறுகிறது. தற்போது நாம் மச்ச சாஸ்திரம் குறித்து பார்க்கலாம்.
பொதுவாக, பெண்களுக்கு நெற்றிப் பொட்டில் மச்சம் இருந்தால் உயர்ந்த பதவி கிடைக்கும் என்றும், செல்வம் நிறைந்தவர் ஒருவர் இவருக்கு கணவராக வருவார் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வலது புருவத்திற்கு மேல் மச்சம் இருக்கும் பெண்கள் தன்னம்பிக்கை, தைரியம் மிகுந்தவர்களாக திகழ்வார்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள், எதையும் சாதிக்கும் திறமை கொண்டவராகவும் இருப்பார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
அடுத்ததாக, இடது புருவத்திற்கு மேல் மச்சம் இருக்கும் பெண்கள் ஒழுக்கம் நிறைந்த பெண்களாக திகழ்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், மூக்குக்கு மேல் மச்சம் இருக்கும் பெண்கள் எதையும் சாதிக்கும் சக்தி படைத்தவராக காணப்படுவார்கள்.
தொடர்ந்து, மூக்கு நுனியில் மச்சம் இருக்கும் பெண்களுக்கு பணக்கார நபர் கணவராக அமையும் வாய்ப்பு உண்டு என மச்ச சாஸ்திரம் கூறுகிறது. இதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இவரது கணவர் பணக்காரராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு எனக் கூறப்படுகிறது.
(Disclaimer: இந்தக் கட்டுரை ஜோதிடத்தில் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கட்டுரை தகவல்களை பயன்படுத்துவது பயனரின் தனிப்பட்ட பொறுப்பாகும்)
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com