Vanagan movie review | பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Vanagan movie review | பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Published on: January 11, 2025 at 7:21 pm
பாலா டைரக்ஷனில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள வணங்கான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் காட்சிகள் அழுத்தமாக உள்ளன என்றும் படத்தை பார்த்தவர்கள் கூறிவருகின்றனர். மேலும் ட்விட்டர் வாசிகள் தங்களின் விமர்சனத்தில் பாலா சமூகத்தின் மீதுள்ள கோபத்தை பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெல்ட்டால் அடித்தது போல் அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளார் எனக் கூறியுள்ளனர்.
இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்கவிருந்தார். இந்த நிலையில் அவர் படத்தில் இருந்து விலகினார் பின்னர்தான் படத்திற்குள் அருண் விஜய் வந்தார். படத்தில் அவர் நடிப்பில் பிச்சு உதறியுள்ளார் என பல்வேறு தரப்பட்ட ரசிகர்களும் கூறுகின்றனர். படம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பது போல் உள்ளது. பல்வேறு காட்சிகள் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இந்தப் படம் அருண் விஜய்க்கு மற்றுமொரு கம்பேக் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். படத்தில் வசூல் வரும் நாள்களில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியது குறித்து ரசிகர்கள் சிலர் நல்ல வேளை அவர் எஸ்கேப் ஆகிவிட்டார் என்றும் கூறுகின்றனர். அதாவது படம் பாலாவுக்கு கம்பேக் இல்லை; மாறாக சூர்யா கிரேட் எஸ்கேப் எனக் கூறுகின்றனர்.
எனினும், இந்தப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அருண் விஜய் மற்றும் பாலாவுக்கு நல்ல பெயரை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com