Pathanamthitta girl assault case | தடகள வீராங்கனையான அந்தப் பெண் தனது அண்டை வீட்டார், பயிற்சியாளர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் உள்ளிட்ட நபர்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
Pathanamthitta girl assault case | தடகள வீராங்கனையான அந்தப் பெண் தனது அண்டை வீட்டார், பயிற்சியாளர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் உள்ளிட்ட நபர்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
Published on: January 11, 2025 at 7:58 pm
பத்தனம்திட்டா சிறுமி பாலியல் வன்கொடுமை: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 18 வயதான பட்டியலின சிறுமி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்களிடம் அவர் தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் காவல் துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, சிறுமி கூறியது போல், ஆரம்ப விசாரணையில் 60க்கும் மேற்பட்டோர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இரண்டு காவல் நிலையங்களில் 5 எஃப்.ஐ.ஆர்.கள் பதியப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சுபின் (24), எஸ். சந்தீப் (30), வி.கே. வினீத் (30), கே. ஆனந்த் (21), மற்றும் ஸ்ரீனி என்கிற எஸ். சுதி ஸ்ரீனி (24) எனப் பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் பத்தனம்திட்டாவில் உள்ள சென்னீர்கராவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களில் உள்ள புகைப்படங்களிலிருந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் சனிக்கிழமை (ஜன.11, 2025) மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, தடகள வீராங்கனையான அந்தப் பெண் 13 வயதாக இருந்தபோது, அவரது தந்தையின் நண்பரான சுபின் என்பவரின் மகன ஸ்மார்ட்போனை காண்பித்து அவரை வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் நிர்வாணப் படங்களையும் தனது தொலைபேசியில் படம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், சிறுமிக்கு 16 வயதாக இருந்தபோது, சுபின் அவளை அவர்கள் பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். இதனை வீடியோவாக தனது தொலைபேசியில் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் 60க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் எனப் போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சுபினின் நண்பர்கள் மத்தியில் இந்தக் காட்சிகள் பகிரப்பட்டதாகவும், அவர்களும் அவளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான துஷ்பிரயோகத்திற்குப் பிறகு கல்வித் திறன் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு ஆலோசனை அமர்வின் போது பெண்கள் அதிகாரமளிப்பு கூட்டு முன் இந்த விஷயத்தை முதலில் வெளிப்படுத்தினார். சிறுமி தனது பயிற்சியாளர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் உள்ளிட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாரில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com