Mythology | இந்த பிரபஞ்சத்தை இயக்கும் விதிகளாக கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறியது.
Mythology | இந்த பிரபஞ்சத்தை இயக்கும் விதிகளாக கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறியது.
Published on: December 8, 2024 at 12:31 pm
Mythology | ஒருமுறை கிருஷ்ணரும் அர்ஜுனனும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரை நோக்கி மாதவா இந்த பிரபஞ்சம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர் இந்த 9 விதிகளின்படியே பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அந்த விதிகளை கூறத் தொடங்குகிறார்.
முதல் விதி இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும் அது நமக்கே திரும்பி வந்து சேரும். வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை நமக்கு தேவையானவைகளை நாம் தான் நடத்திச் செல்ல வேண்டும். மூன்றாவது விதி சிலவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும். நான்காவது விதி நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும்.
நம் வாழ்வில் நிகழ்ந்தவற்றிற்கு நாமே பொறுப்பு என்று உணர்ந்து வாழ வேண்டும். ஆறாவது விதி நேற்று இன்று நாளை என இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஏழாவது விதி ஒரு சமயத்தில் இரு வேறு விஷயங்களை சிந்திக்க முடியாது. எட்டாவது விதி நம் நடத்தையில் நம் சிந்தனையும் செயலையும் செயல்படுத்த வேண்டும். நம் முன் காலத்தையே நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை விட்டு போய்விடும். இப்படி ஒன்பது விதிகளையும் சொல்லி முடித்தார் கிருஷ்ணர்.
இதையும் படிங்க ஒருமுறை அணிந்த மாலையை சுத்தம் செய்து மறுமுறை அணியலாமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com