தனது வாழ்வில் செய்த தேவையற்ற செலவு தனது முன்னாள் கணவருக்கு செய்த செலவுகள் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தனது வாழ்வில் செய்த தேவையற்ற செலவு தனது முன்னாள் கணவருக்கு செய்த செலவுகள் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
Published on: November 25, 2024 at 10:48 pm
Samantha Slams Naga | தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். தற்போது சமந்தா ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் வெப் தொடரின் இந்தி பதிப்பான சிட்டாடல் ஹனி பனி நடித்துள்ளார். இதில் நடிகர் வருண் தவானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் ராஜ் மற்றும் டி.கே இயக்கியுள்ள இந்த தொடர் கடந்த 7ஆம் தேதி அமேசான் ஓடிபி தளத்தில் வெளியானது. இந்நிலையில் நடிகை சமந்தாவும் வருண் தவானும் நேர்காணல் ஒன்றில் ஒருவரை ஒருவர் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அதில் வருண் தவான் சமந்தா விடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த தேவையற்ற செலவு என்றால் எதை சொல்வீர்கள் என்று கேட்கிறார். அதற்கு நடிகை சமந்தா என்னுடைய முன்னால் கணவருக்கு விலை உயர்ந்த பரிசுகள் வாங்க செய்த செலவுகள் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
A post shared by prime video IN (@primevideoin)
இதையும் படிங்க சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி !
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com