மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது.
Published on: November 23, 2024 at 2:45 pm
Maharashtra Election Result | மகாராஷ்டிராவில் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணி, காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணி களமிறங்கின.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கான இடங்கள் 145 ஆகும். வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது.
பா.ஜனதா கூட்டணி – 223 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி – 55 இடங்களையும் பிற கட்சிகள் – 10 இடங்களையும் பெற்றுள்ளது. இதனால் பெரும்பான்மையும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது.
இதையும் படிங்க வயநாடு மக்களவைத் தேர்தல்: வரலாற்று வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com