வால்பாறையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையின் நவீன கருவிகளை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையின் நவீன கருவிகளை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Published on: November 22, 2024 at 2:32 pm
Updated on: November 22, 2024 at 2:33 pm
Valparai | கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த யானைகள் எஸ்டேட் பகுதிகளில் கூட்டமாகவும் தனித்தனியாகவும் சுற்றித் திரிகின்றன. இவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் நவீன கருவிகளை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
கருவிகள் பொருத்தப்படாத பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நேற்று அங்குள்ள மாரியம்மன் கோவில் கதவை காட்டு யானைகள் உடைத்தன. மேலும் பணியாளர் கலைவாணி என்பவரது வீட்டின் கதவு ஜன்னல்களையும் உடைத்தது. தும்பிக்கையை ஜன்னல் வழியே உள்ளே விட்டு உணவு பொருள்கள் கிடைக்குமா என்று தேடி உள்ளன வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளன.
அதேபோல் அப்பகுதியில் உள்ள 8 வீடுகளின் கதவு ஜன்னல்களை உடைத்துள்ளன. பின்னர் அருகில் உள்ள வனப் பகுதிக்கு சென்று தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளன. அவை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம்; டி.டி.வி. தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com