அண்மையில் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை மூன்று வங்கிகள் திருத்தியுள்ளன. அந்த வங்கிகள் எவை? திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் என்ன?
அண்மையில் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை மூன்று வங்கிகள் திருத்தியுள்ளன. அந்த வங்கிகள் எவை? திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் என்ன?
Published on: November 22, 2024 at 1:21 pm
Fixed Deposit | ஃபிக்சட் டெபாசிட் முதலீடுகள் நிலையான வருமானத்தை வழங்குகிறது. ஃபிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதம் பொதுவாக சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டியாகும்.
கால வைப்புத்தொகைக்கான வங்கிகளின் வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறும். ஃபிக்சட் டெபாசிட் தொகைகளுக்கு வங்கிகள் செலுத்தும் வட்டி விகிதங்கள் காலவரையறை, தொகை, டெபாசிட்டரின் வயது (அதாவது மூத்த குடிமக்கள் அல்லது மூத்த குடிமக்கள் அல்லாதவர்கள்) மற்றும் வங்கியைப் பொறுத்து மாறுபடுகிறது.
நவம்பர் 2024 இல் தங்களுடைய .ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களைத் திருத்திய 3 வங்கிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
எஸ் பேங்க் எஃப்.டி. வட்டி விகிதங்கள்
3 கோடிக்கு குறைவான எஃப்.டி க்கான வட்டி விகிதங்களை எஸ் பேங்க் திருத்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட எஃப்.டி. வட்டி விகிதங்கள் நவம்பர் 5, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. வங்கியானது 18 மாத காலத்திற்கான எஃப்.டி. வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 8% இலிருந்து 7.75% ஆக குறைத்துள்ளது.
வழக்கமான குடிமக்கள் இப்போது எஃப்.டிகளில் ஆண்டுக்கு 3.25% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களைப் பெறலாம். மூத்த குடிமக்கள் 3.75% முதல் 8.25% வரை வட்டி விகிதங்களைப் பெறலாம். பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு முறையே 7.75% மற்றும் 8.25% என்ற அதிகபட்ச வட்டி விகிதம் 18 மாத எஃப்.டி கால அவகாசத்தில் வழங்கப்படுகிறது.
பஞ்சாப் & சிந்து வங்கி எஃப்.டி வட்டி விகிதங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கியும் எஃப்.டி வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் நவம்பர் 14, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பஞ்சாப் & சிந்து வங்கியானது, பொதுக் குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 4% மற்றும் 7.45% இடையே எஃப்.டி வட்டி விகிதங்களை வழங்குகிறது. 555 நாட்கள் டெபாசிட்டுகளுக்கு வங்கி அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.50% வழங்குகிறது.
சீனியர் சிட்டிசன் எஃப்.டி. விகிதங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கியில் மூத்த குடிமக்களுக்கு ரூ. 3 கோடிக்கும் குறைவான டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 0.50% கூடுதல் வட்டி பலன் அளிக்கப்படும். என்.ஆர்.இ, என்.ஆர்.ஓ. வைப்புத்தொகை, மூலதன ஆதாயம் மற்றும் மொத்த வைப்புத்தொகைகளுக்குக் கிடைக்காது.
வங்கி மூத்த குடிமக்களுக்கு 555 நாட்கள் வைப்பு காலத்தின் மீது 8% அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சூப்பர் சீனியர் சிட்டிசன் எஃப்.டி. விகிதங்கள்
சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) குறிப்பிட்ட காலத்தில் 0.15% கூடுதல் வட்டி வழங்கப்படும் (அதாவது 222 நாட்கள், 333 நாட்கள், 444 நாட்கள், 555 நாட்கள், 777 நாட்கள், 999 நாட்கள், பிஎஸ்பி கிரீன் எர்த் (22 M, 44M, 66M)).
ரூ.3 கோடிக்கும் குறைவான கால டெபாசிட்டுகள், 180 நாட்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட முதிர்வு காலத்திற்கான புதிய மற்றும் கால டெபாசிட்டுகளை புதுப்பித்தல், என்.ஆர்.இ, என்.ஆர்.ஓ. டெபாசிட்டுகள், மூலதன ஆதாயம் மற்றும் மொத்த டெபாசிட்டுகளுக்கு கிடைக்காது.
சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கி வழங்கும் மிக உயர்ந்த வட்டி விகிதம் 555 நாட்களுக்கான 8.15% ஆகும்.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வட்டி விகிதங்கள்
பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவும் அதன் எஃப்.டி. வட்டி விகிதத்தை திருத்தியது. மதிருத்தத்திற்குப் பிறகு, பொதுக் குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீடுகளுககு 2.75% மற்றும் 7.35% PA (சிறப்பு எஃப்.டி. திட்டங்கள் உட்பட) வரையிலான வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது.
சீனியர் சிட்டிசன்களுக்கு 2.75% மற்றும் 7.85% PA (சிறப்பு எஃப்.டி. திட்டங்கள் உட்பட) இடையே வட்டி விகிதங்களை வழங்குகிறது. திருத்தப்பட்ட கட்டணங்கள் நவம்பர் 14, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பொது குடிமக்களுக்கான சிறப்பு எஃப்.டி. திட்டங்கள் ஆண்டுக்கு பின்வரும் வட்டி விகிதங்களை வழங்குகின்றன
200 நாட்களுக்கு 6.90%
333 நாட்களுக்கு 7.35%
400 நாட்களுக்கு 7.10%
777 நாட்களுக்கு 7.75% என வட்டி வழங்குகின்றன.
சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு எஃப்.டி திட்டங்கள் ஆண்டுக்கு பின்வரும் வட்டி விகிதங்களை வழங்குகின்றன
200 நாட்களுக்கு 7.40%
333 நாட்களுக்கு 7.85%
400 நாட்களுக்கு 7.60%
777 நாட்களுக்கு 7.75%. வட்டி வழங்குகின்றன.
இதையும் படிங்க பி.எம் ஜன் தன் சேமிப்பு வங்கி கணக்கு: கே.ஒய்.சி அப்டேட் செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com