Violence erupts in Bangladesh: ஒஸ்மானின் மரணத்தை தொடர்ந்து, வங்கதேசத்தில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.
Violence erupts in Bangladesh: ஒஸ்மானின் மரணத்தை தொடர்ந்து, வங்கதேசத்தில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.

Published on: December 19, 2025 at 7:22 pm
டாக்கா, டிச.19, 2025: இன்கிலாப் மஞ்ச் ஒருங்கிணைப்பாளர் ஷரீஃப் உஸ்மான் ஹாடி மரண செய்தி வெளியான சில மணி நேரங்களில் வங்கதேசத்தில் மீண்டும் புதிய வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை, புகழ்பெற்ற பெங்காலி கலாச்சார அமைப்பான “சாயனாட்” வளாகம் சேதப்படுத்தப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம், அதிகாலை 1:30–2:00 மணி அளவில் தலைநகரின் தான்மொண்டி பகுதியில் உள்ள சாயனாட் ஸंஸ்கிருதி பவனில் நடைபெற்றுள்ளது.
அதாவது, அடையாளம் தெரியாத சிலர் கட்டிடத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, மரச்சாமான்கள் மற்றும் இசைக்கருவிகளை உடைத்து, வளாகத்திற்குள் மற்றும் வெளியே சாலையிலும் பொருட்களுக்கு தீ வைத்துள்ளனர்.
இந்தத், தாக்குதலின் போது அவர்கள் “நாராயே தக்பீர்” உள்ளிட்ட மத கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வங்கதேச இராணுவம் மற்றும் போலீசார் கூட்டத்தைச் சிதறடித்து சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவந்தனர் எனக் கூறப்படுகிறது.
1961-இல் நிறுவப்பட்ட சாயனாட், வங்க தேசத்தின் மிக முக்கியமான கலாச்சார நிறுவனங்களில் ஒன்றாகும். இது பெங்காலி இசை, பாரம்பரியம் மற்றும் மரபுகளைப் பரப்புவதில் பரவலாக அறியப்படுகிறது. இந்தச் சம்பவம், தொடர்ச்சியான கலவரத்தின் மத்தியில் கலாச்சார மற்றும் பொது நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்து தீவிரமான கவலைகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க : நரேந்திர மோடி சிறந்த நண்பர்; இந்தியா அற்புதமான நாடு.. டொனால்ட் ட்ரம்ப்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com