சமரசப் பேச்சுக்கே இடமில்லை..ஈரான் சரணடைவதே தீர்வு…டொனால்ட் டிரம்ப்

Donald Trump: ஈரான் சரணடைவதே தீர்வு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Published on: March 6, 2026 at 10:40 pm

நியூயார்க், மார்ச் 06 2026: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதற்கு ஈரானும் பதிலடியாக எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.

ஈரான் ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் பதற்றம் காரணமாக வான்வழி போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானில் உச்ச தலைவராக காமேனியின் மொஜ்தபா கமேனி (56) ஈரானின் உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதுகுறித்து பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுடன் எவ்வித சமரசப் பேச்சுக்கும் இடமில்லை. ஈரான் நிபந்தனையற்ற சரணடைவதே தீர்வு. ஈரான் சரணடைந்த பின் அங்கு தகுதியான ஏற்கக்கூடிய தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ஈரானை அழிவில் இருந்து மீட்டு பொருளாதார வலிமையான நாடாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : GenZ போராட்டம்.. நேபாளத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு!

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது எப்படி? Ayatollah Ali Khamenei killing

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com