வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு

Vellamandi N. Natarajan: அதிமுகவில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Published on: March 6, 2026 at 6:15 pm

சென்னை, மார்ச் 06 2026: 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் பயணித்து வருபவர் வெல்லமண்டி நடராஜன். இவர் 2016-2021 காலகட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் கடந்த 2022-ல் நிலவிய உள்கட்சி மோதலின் போது ஓ. பன்னீர் செல்வத்தின் பக்கம் நின்றார். இதன் காரணமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், ஓபிஎஸ் திடீரென திமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளரான வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால் திமுகவில் பயணிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டார்.

தொடர்ந்து அவர் கடந்த மாத இறுதியில் தன்னை மீண்டும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில் வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவை டு சார்ஜா, அபுதாபி விமானங்கள் ரத்து

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி பேட்டி Piyush Goyal

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com