Israeli airstrike on Iran: பழிவாங்குவதாக நினைத்து அமெரிக்கா மீது இஸ்ரேல் மீதோ பதில் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை எடுத்துள்ளார்.
Israeli airstrike on Iran: பழிவாங்குவதாக நினைத்து அமெரிக்கா மீது இஸ்ரேல் மீதோ பதில் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை எடுத்துள்ளார்.

Published on: March 1, 2026 at 1:58 pm
வாஷிங்டன் மார்ச் 1 2026; ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் காமேனி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன; இதனை உறுதிப்படுத்தி உள்ள ஈரான் ஊடகங்கள், 40 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அல்லது இஸ்ரேல் நிலைகள் மீது பழி வாங்குதல் என்ற நடவடிக்கையில் ஏதேனும் ஈடுபட்டால் ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கா, இஸ்ரேல் எங்கள் “சிவப்பு கோடுகளை” மீறியுள்ளன; விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: ஈரான் பாராளுமன்றத் தலைவர் எச்சரித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கில் உள்ள 27 அமெரிக்க தளங்களைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் அரசின் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை, உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்த தாக்குதல்களில் சனிக்கிழமை டெஹ்ரானில் கொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தின.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து விமானத் தாக்குதலை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, 86 வயதான காமெனிக்கு தாக்குதல் நடந்ததாக தெரிவித்தனர். பின்னர், ஈரான் அரசுத் தொலைக்காட்சி மற்றும் IRNA செய்தி நிறுவனம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. காமெனியின் மகள், மருமகன் மற்றும் பேத்தியும் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 51 மாணவர்கள் பலி
ஈரான் அரசு தொலைக்காட்சி, 40 நாள் துக்க காலம் மற்றும் ஏழு பொதுக் விடுமுறைகளை அறிவித்தது. 1989 முதல் ஆட்சியில் இருந்த காமெனியின் மரணம் ஈரானில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சனிக்கிழமை நடந்த தாக்குதல்களில், டெஹ்ரானில் காமெனியின் அலுவலகம் அருகே முதல் தாக்குதல் நடந்தது. ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் ஒரு ஆரம்பப்பள்ளி மாணவிகள் பள்ளியையும் இஸ்ரேல் தாக்கியது; இதில் குறைந்தது 148 பேர், மாணவிகள் உட்பட உயிரிழந்தனர்.
ஈரான் ரெட் கிரசன்ட் தெரிவித்ததாவது, தாக்குதல்களில் குறைந்தது 201 பேர் உயிரிழந்துள்ளனர்; 747 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்களுக்கு பின், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் நடத்தியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் பல நாடுகள் உடனடி போர்நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பவும் வலியுறுத்தின.
இதையும் படிங்க; ஈரான்- இஸ்ரேல் இடையே உச்சகட்ட போர் பதற்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com