Russia FM Lavrov: “இந்தியா, சீனாவை மிரட்டும் வேலைகள் எல்லாம் எடுபடாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு செய்தி அனுப்பியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
Russia FM Lavrov: “இந்தியா, சீனாவை மிரட்டும் வேலைகள் எல்லாம் எடுபடாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு செய்தி அனுப்பியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
Published on: September 19, 2025 at 1:12 pm
மாஸ்கோ, செப்.19, 2025: ரஷ்ய நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “அமெரிக்காவின் வரிவிதிப்பை கடுமையாகக் கண்டித்தார். மேலும், இந்தியா, சீனா போன்ற பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள் இதுபோன்ற இறுதி எச்சரிக்கைகளுக்கு அடிபணியாது” என்றும் கூறினார்.
ரஷ்யாவின் முதன்மை செய்தி சேனலான ‘தி கிரேட் கேம்’ நிகழ்ச்சியில் பேசிய செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய எரிசக்தி கொள்முதலை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகள் எடுபடாது” என்றார்.
US Can't Just Stop India & China Buying Russian Oil – Lavrov
— RT_India (@RT_India_news) September 18, 2025
The Russian FM said India & China are powers & ancient civilisations, Washington can't just slap tariffs on everything it doesn't like about them.
🇷🇺🇮🇳🇨🇳 RIC energy. pic.twitter.com/sAN2YpIMR3
மேலும், “இது பாதிக்கப்பட்ட நாடுகளை புதிய எரிசக்தி சந்தைகள் மற்றும் புதிய வளங்களைத் தேடவும், அதிக பணம் செலுத்தவும் கட்டாயப்படுத்துகின்றன” எனவும் குற்றஞ்சாட்டினார். உக்ரைன்-ரஷ்யா போருக்கு மத்தியில் மாஸ்கோவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகபடியாக வரியை விதித்தார்.
மேலும், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் இந்தியா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கள் வந்துள்ளன.
இது இந்தியா மற்றும் சீனாவுக்கு ரஷ்யா பக்க பலமாக இருப்பதையும் காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க : இங்கிலாந்து ராணி இரவு விருந்து.. தோள்பட்டை மூடாத மஞ்சள் ஆடை.. மெலேனியா ட்ரம்ப் மீது அதிருப்தி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com