தாய்லாந்தில் தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவில் அந்நாடு கையெழுதிட்டது.

February 19, 2025
தாய்லாந்தில் தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவில் அந்நாடு கையெழுதிட்டது.
Published on: September 26, 2024 at 8:53 pm
Thailand | தென்கிழக்கு ஆசியாவில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த ஒரே நாடாக தாய்லாந்து மாறியுள்ளது. இங்கு, மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் தன்பாலின திருமண சட்டத்தில் கையெழுதிட்டார்.
இது பிராந்தியத்தில் LGBTQ+ உரிமை ஆர்வலர்களுக்கு ஒரு வரலாற்று வெற்றியை கொடுத்தள்ளது. இந்த மசோதா ஜூன் மாதத்தில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது சட்டத்துக்கு மன்னரும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து புதிய சட்டம் ஜனவரி 22, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகெங்கிலும் தன்பாலின திருமணத்தை பல்வேறு நாடுகள் அங்கீகரித்துள்ளன.
இதில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2006ஆம் ஆண்டே தென் ஆப்பிரிக்கா இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அடுத்து, 2010ல் அர்ஜென்டினாவும், 2017ல் ஜெர்மனியும், 2019ல் தைவானும், 2022ல் மெக்சிகோவும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தின என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ‘ஆசியாவின் எதிர்காலம் இந்தியா-சீனா உறவு’: ஜெய் சங்கர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com