Charlie Kirks Assassination: சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சார்லஸ் கிரிக்கை மாணவர் ஒருவர் கேலி செய்வது போன்ற வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது.
Charlie Kirks Assassination: சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சார்லஸ் கிரிக்கை மாணவர் ஒருவர் கேலி செய்வது போன்ற வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது.
Published on: September 17, 2025 at 7:45 pm
நியூயார்க், செப்.17, 2025: டெக்சாஸ் மாநில பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சார்லி கிர்க்கின் மரணத்தை கேலி செய்வதைக் காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. பல்கலைக்கழகம் அந்த மாணவரை வெளியேற்றியுள்ளது. வளாகத்தில் நடந்த ஒரு நினைவு நிகழ்வின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
This was at Texas State @txst a Charlie Kirk memorial event hosted by local TPUSA chapter. Student imitates Charlie Kirk’s death and mocks him, goes up to statue where TPUSA members are and imitates his death again, and spits near them. Also uses a vape/weed pen near end of video… pic.twitter.com/mVOHeh1jpk
— TheTexasOne (@TexasRepublic71) September 16, 2025
இது விமர்சனங்களை தூண்டியுள்ளது. அதாவது, “சார்லி கிர்க் நினைவு நிகழ்வில் சார்லி கிர்க்கின் மரணத்தைப் பின்பற்றி அவரை கேலி செய்கிறார். மேலும் வீடியோவின் இறுதியில் ஒரு வேப்/களை பேனாவைப் பயன்படுத்துகிறார், இது வளாகக் கொள்கைக்கு எதிரானது” என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TXST has identified the student in the disturbing video from Monday's event. The individual is no longer a student at TXST. Federal law prevents the university from commenting on individual student conduct matters.
— Texas State University (@txst) September 16, 2025
Statement from President Damphousse: https://t.co/2NCS7KgUS5 https://t.co/brrWRzQaiH pic.twitter.com/avS8PeEwEP
சார்லஸ் கிரிக்
பழமைவாத ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான சார்லி கிர்க், உட்டாவின் ஓரெமில் உள்ள உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் (UVU) பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், அவரது நினைவு நாளில் இவ்வாறு மாணவர் ஒருவர் செய்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ‘நீ இந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல; உன் நாட்டுக்கு திரும்பி போ’.. இந்தியப் பெண்ணுக்கு துன்புறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com