எகிப்து பிரமீட்டில் சிந்து சமவெளி நாகரிகத்தின் செந்தமிழ் மொழி? பரபரப்பு தகவல்கள்

Giza pyramid Tamil link : எகிப்து பிரமீட்டில் சிந்து சமவெளி நாகரிகத்தின் செந்தமிழ் மொழி இருப்பதாக கூறப்படுகிறது.

Published on: June 14, 2026 at 3:18 pm

Updated on: June 14, 2026 at 3:19 pm

திருச்சி, ஜூன் 14, 2026: எகிப்தின் பிரமிடுகள் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. பாரோன் எனப்படும் மன்னர் வம்சத்தின் நினைவுச் சின்னங்களாக அமைந்துள்ள இப்பிரமிடுகளில், 4,540 ஆண்டுகள் பழமையான பாரோ கூபுவின் கிசா பெரிய பிரமிடின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் குறித்து புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த சிந்து சமவெளி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ், அவை குறியீடுகள் அல்ல, சிந்து சமவெளி நாகரிகத்தின் செந்தமிழ் மொழியின் ஆறு எழுத்துகள் எனக் கூறியுள்ளார்.

அவர் விளக்குகையில், அந்த ஆறு எழுத்துகளை சிந்து சமவெளி எழுத்துமுறையின் படி இடமிருந்து வலமாகவும், உள்ளிருந்து வெளியாகவும் படிக்கலாம் எனத் தெரிவித்தார். முதலாவது வாசிப்பு “பஉளின் நள்” எனும் சொற்றொடராகும்; இதற்கு “பூமி நாட்டை ஆண்டவன் சேரன் நடுவே” என பொருள் கொள்ளலாம். இரண்டாவது வாசிப்பு “பா உ(ள்) ளன்நள்” எனும் சொற்றொடராகும்; இதற்கு “தூய்மையான உற்ற நட்பினன் நடுவே” என பொருள் கொள்ளலாம். இவை தமிழ் இலக்கணத்தில் “கூட்டுப் பொருள்கோள்” முறையின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன.

மேலும், சிந்து சமவெளி நகர நாகரிகத்தில் பானைகள், வில்லைகள், முதிரைகள் போன்றவற்றில் “பா” என்ற சொல் தூய்மை எனப் பொருள் பெறுவதால், பிரமிடில் காணப்படும் எழுத்துகளும் அதே பொருளைத் தருகின்றன என அவர் கூறினார். இதனால், “நடுவே உள்ளவன் பாரோன்” அல்லது “நடுவே உள்ளவன் தூய்மையான உற்ற நட்பினன்” எனக் கருதலாம்.

அவர் மேலும், நைல் நதிக்கரையோரம் அமைந்துள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்ட பெயர்கள் — சிகைக் கொற்றான், சாத்தன் போன்றவை — செந்தமிழ் சொற்களாக இருப்பதால், எகிப்து, சிந்து சமவெளி, தமிழகத்துக்கிடையே தொடர்பு இருந்தது தெளிவாகிறது எனக் குறிப்பிட்டார். இருப்பினும், பிரமிட் கட்டுமானத்தில் தமிழகக் கட்டிடக் கலைஞர்களின் பங்கு இருந்ததா போன்ற கேள்விகளுக்கான விடைகள் இன்னும் ஆராயப்பட வேண்டியவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : பாக். ஆக்கிரமிப்பு காஷ்மிரீல் பரபரப்பு.. பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com