PM Modi Saudi Arabia visit: பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணம்: கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது சவுதி அரேபியா பயணம் இதுவாகும். மேலும் ஜெட்டாவிற்கு இது முதல் முறையாகும்.
PM Modi Saudi Arabia visit: பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணம்: கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது சவுதி அரேபியா பயணம் இதுவாகும். மேலும் ஜெட்டாவிற்கு இது முதல் முறையாகும்.
Published on: April 22, 2025 at 6:41 pm
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஏப்.12 2025) சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை தொடர்ந்து, இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, ஜெட்டாவுக்குச் செல்வதற்கு முன், சவுதி அரேபியாவுடனான வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது என்றும், கடந்த பத்தாண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளன என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
وصلتُ إلى جدة، المملكة العربية السعودية. ستُعزز هذه الزيارة الصداقة بين الهند والمملكة العربية السعودية. أتطلع للمشاركة في مختلف البرامج اليوم وغدًا. pic.twitter.com/icYwEKq583
— Narendra Modi (@narendramodi) April 22, 2025
மேலும், “மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் 2வது கூட்டத்தில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்குள்ள இந்திய சமூகத்தினருடனும் நான் உரையாடுவேன்” என்றும் அவர் தெரிவித்து இருந்தார். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடனான சந்திப்பிற்காக ஜெட்டாவிற்கு வருவதற்கு முன்பு அரபு செய்திக்கு அளித்த பேட்டியில், “சவுதி அரேபியா இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கூட்டாளிகளில் ஒன்று. ஒரு கடல்சார் அண்டை நாடு, நம்பகமான நண்பர் மற்றும் ஒரு நட்பு நாடு” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சவுதியில் பாடகர் ஒருவர் பாடல் பாடி உற்சாக வரவேற்பு அளித்தார். #NarendraModi #modi #saudiarabia pic.twitter.com/ZY1UxZD2OX
— Dravidan Times (@DravidanTimes) April 22, 2025
கடந்த பத்தாண்டுகளில் சவுதி அரேபியாவிற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட மூன்றாவது பயணம் இதுவாகும். மேலும் ஜெட்டா நகரத்திற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் பயணம் இதுவாகும். கடந்த 2023 ஆம் ஆண்டு முகமது பின் சல்மானின் இந்தியாவிற்கான அரசுமுறைப் பயணத்தைத் தொடர்ந்து இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புதிய போப் தேர்வு: 4 இந்தியர்கள் வாக்களிக்க தேர்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com