G7 summit in Canada: பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 உச்சிமாநாட்டில் சுமார் 10 மணி நேரத்திற்குள் 12 இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
G7 summit in Canada: பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 உச்சிமாநாட்டில் சுமார் 10 மணி நேரத்திற்குள் 12 இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
Published on: June 18, 2025 at 5:37 pm
Updated on: June 18, 2025 at 5:38 pm
ஒட்டாவா, ஜூன் 18 2025: பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 உச்சிமாநாட்டில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டார். இந்த மாநாட்டின் போது, அவர் பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார், இதில் ஜெர்மனியின் அதிபர் மற்றும் மெக்சிகோ மற்றும் தென் கொரியாவின் அதிபர்களை முதல் முறையாக சந்தித்தார்.
அதாவது, கனடாவின் ராக்கீஸில் உள்ள கனனாஸ்கிஸ் ரிசார்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆகியோரையும் சந்தித்தார்.
Had an excellent meeting with Prime Minister Mark Carney. Complimented him and the Canadian Government for successfully hosting the G7 Summit. India and Canada are connected by a strong belief in democracy, freedom and rule of law. PM Carney and I look forward to working closely… pic.twitter.com/QyadmnThwH
— Narendra Modi (@narendramodi) June 17, 2025
இதில் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வர்த்தகம், முதலீடு, தொடக்க நிறுவனங்கள், புதுமை, மருந்துகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வாகனத் துறை மற்றும் மக்களிடையே பரிமாற்றங்களை மேம்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பு மேம்பாடு ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் ஷீன்பாமும் விவாதித்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தென் கொரிய பிரதமரைச் சந்தித்த பிறகு, வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பலவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, 10 மணி நேரத்தில் 12 முக்கிய தலைவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இஸ்ரேல்-ஈரான் போர்.. 20க்கும் மேற்பட்டோர் பலி.. ட்ரம்ப் எச்சரிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com