Myanmar earthquake death: மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி 1600 பேர் வரை மரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அமெரிக்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.
Myanmar earthquake death: மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி 1600 பேர் வரை மரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அமெரிக்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.
Published on: March 30, 2025 at 9:56 am
நய்பிடாவ் (மியான்மர்), மார்ச் 30 2025: மியான்மர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மீட்புப் பணியாளர்கள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ தாண்டி விட்டது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், வெளிநாட்டு மீட்புப் பணியாளர்கள் நடவடிக்கைகளில் இணைந்து பல உடல்களை மீட்டனர்.
தொடர்ந்து, மியான்மரின் இராணுவ அரசாங்கத் தலைவர் 1,644 க்கும் மேற்பட்டோர் இறந்ததை உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் ஒரு அமெரிக்க நிறுவனம் பலி எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து மியான்மருக்கு நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மியான்மரில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க : தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வரிசையாக சரிந்த கட்டிடங்கள்.. மீட்பு பணிகள் தீவிரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com