Narendra Modi America Visit: பெரிய கனவுகளோடு சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு அழைத்து வரும் “மனித கடத்தல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு” எதிராகப் போராட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
Narendra Modi America Visit: பெரிய கனவுகளோடு சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு அழைத்து வரும் “மனித கடத்தல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு” எதிராகப் போராட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
Published on: February 14, 2025 at 4:53 pm
Updated on: February 17, 2025 at 11:50 am
அமெரிக்கா: வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், பிரதமர் நரேந்திர மோடி கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது சட்டவிரோத குடியேற்றம் குறித்த பிடிஐயின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவைப் பற்றிய கேள்வி மட்டுமல்ல இது உலகளாவிய பிரச்சனையாகும்.சட்டவிரோதமாக வேறொரு நாட்டிற்குள் நுழைந்து வசிக்கும் யாராக இருப்பினும் அந்த நாட்டில் வாழ எந்த சட்டப்பூர்வ உரிமையோ அதிகாரமோ இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்” என்றார்.
மேலும், இந்தியாவையும் அமெரிக்காவையும் பொறுத்தவரை, ” அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்திய குடிமக்களை, இந்தியா மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.
இருப்பினும், எங்களுக்கு பிரச்சினை அதோடு நிற்பதில்லை. சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் மிகவும் சாதாரண குடும்பங்களின் குழந்தைகள், அவர்கள் பெரிய கனவுகள் மற்றும் வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களில் பலர் மனித கடத்தல்காரர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
அதனால்தான் நாம் முழு மனித கடத்தல் அமைப்பையும் எதிர்த்துப் போராட வேண்டும்” என்று மோடி கூறினார்.
மேலும் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்த முழு அமைப்பையும் வேரோடு பிடுங்கி அழிக்க வேண்டும். இதனால் மனித கடத்தல் முடிவுக்கு வரும் என்றார்.
அனைத்தையும் விற்று, பெரிய கனவுகளோடு, சட்டவிரோத குடியேறிகளாக வேறு நாட்டிற்கு கொண்டு வரப்படும் ஏழை மக்களுக்கு இது அநீதியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கு எதிரான எங்களுடைய போராட்டம் பெரியது. இந்த சுற்றுச்சூழல் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவை முழுமையாக ஆதரிப்பார் என்று நான் நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க இதுவே சரியான நேரம்: இந்தியாவுக்கு தொழில் தொடங்க வாருங்கள்; பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com