இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
Published on: December 9, 2024 at 5:35 pm
Landslides and flash floods hit Java island | இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள மலைப்பாங்கான கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்களை இந்தோனேசிய மீட்புப் படையினர் மீட்டனர். மேலும், இரண்டு பேரை காணவில்லை.
மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால், 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் பலத்த காற்று 172 கிராமங்களை அழித்தது. 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலையால் 400க்கும் மேற்பட்ட வீடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால், ஏறக்குறைய 1000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.
இந்த பேரழிவில் 31 பாலங்கள், 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் (1,332 ஏக்கர்) நெல் வயல்கள் அழிந்தன, அதே நேரத்தில் 1,170 வீடுகளின் கூரை வரை வெள்ளத்தில் மூழ்கின. தீவிர காலநிலையால் 3,300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க வங்கதேசத்தில் இந்து துறவி கைது; வழக்கறிஞர் மீது கொடூரத் தாக்குதல்: ஐ.சி.யூ.வில் அனுமதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com