Tuesday, 18th Mar, 2025
9:54 AM

காசா மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 120 பேர் பலி

Airstrikes against Hamas across Gaza: காசா முழுவதும் ஹமாஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது, இதில் குழந்தைகள் உட்பட 120 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Published on: March 18, 2025 at 10:06 am

ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் புதிய தாக்குதல்களைத் தொடங்கியது, மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தடைபட்டதைத் தொடர்ந்து ராணுவத்தை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 18, 2025) இஸ்ரேலின் தாக்குதலில் குறைந்தது 121 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, ஹமாஸ் இலக்குகளைத் தாக்கி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை காசா முழுவதும் ஹமாஸைத் தாக்க இஸ்ரேல் இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளது.

ஹமாஸ் தனது பணயக்கைதிகளை விடுவிக்க மீண்டும் மீண்டும் மறுத்தது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மத்தியஸ்தர்களிடமிருந்து பெற்ற அனைத்து சலுகைகளையும் நிராகரித்தது. இதையடுத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இஸ்ரேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இஸ்ரேல் இனிமேல், ஹமாஸுக்கு எதிராக அதிகரித்து வரும் இராணுவ வலிமையுடன் செயல்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மார்ச் 18, 2025 அன்று தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Yemens Houthis: ஏமன் ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல்: 24 பேர் உயிரிழப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com