இந்தோனேஷியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
Published on: November 29, 2024 at 1:52 pm
Updated on: November 29, 2024 at 2:00 pm
Indonesia landslide | இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகரத்திற்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சுற்றுலா பேருந்து ஒன்று சிக்கியது. பேருந்தின் மீது மரங்கள் மண் மற்றும் பாறைகள் விழுந்து மூடின. இதனால் பேருந்தில் இருந்த டிரைவர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று மீட்பு அதிகாரி தெரிவித்துள்ளார். கனமழையால் வீடுகள் மற்றும் விளை நிலங்கள் சேதுமடைந்துள்ளது. மேலும் சுமத்ரா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் நான்கு இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க இந்தியா – சீனா இடையே ‘பெரிய முன்னேற்றம்’ ; சீன ராணுவம் தகவல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com