Canada | கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா-கனடா உறவை சிதைத்துவிட்டார் என இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
Canada | கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா-கனடா உறவை சிதைத்துவிட்டார் என இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
Published on: October 21, 2024 at 11:02 am
Canada | கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இவர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடாபிரதமர் ஜஸ்டின் குற்றஞ்சாட்டினார்.
இது சர்வதேச அளவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய தூதர், “எந்த அடிப்படையில் என்னைக் கேள்வி கேட்கிறார்கள். நான் எதற்காக விசாரிக்கப்படுகிறேன் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும், அதனால் நான் தயாராக இருக்கிறேன்.
ஒருவர் சிறிய குற்றம் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார். மேலும், “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் – கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து கீழ்நோக்கி சரிய தொடங்கிவிட்டன” என்றார்.
ஜப்பான், சூடான், இத்தாலி, துருக்கி, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பணியாற்றிய நாட்டின் மூத்த தூதர்களில் ஒருவரான வர்மாவுக்கு எதிராகவும் கனடா குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com