இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.
Published on: November 21, 2024 at 11:04 pm
Arrest warrant against Netanyahu | சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) வியாழக்கிழமை (நவ.21, 2024) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பித்தது.
இவர்கள் மீது கொலை, துன்புறுத்தல் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி போன்ற அத்தியாவசியப் பொருட்களை இஸ்ரேல் தடை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது கடுமையான மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் குழந்தைகள் உட்பட இறப்புகளுக்கு வழிவகுத்தது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுத்தது.
இதுவரை லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஹமாஸை அழிப்பதாக இஸ்ரேல் சபதம் செய்ததால், காஸாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் உட்பட முக்கிய உள்கட்டமைப்புகளும் தாக்கப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க கிழக்கு லடாக் ரோந்து; இந்தியா- சீனா முக்கிய பேச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com