மலேசிய முன்னாள் பிரதமர் மரணம்.. யார் இந்த அப்துல்லா அஹமது?

Abdullah Ahmad: மலேசிய நாட்டின் சீர்திருத்தத்தின் ஆதரவாளரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான அப்துல்லா அஹமது படாவி 85 வயதில் காலமானார்.

Published on: April 15, 2025 at 11:01 am

Updated on: April 15, 2025 at 11:18 am

கோலாலம்பூர், ஏப்.15 2025: மிதமான நிலைப்பாடு மற்றும் சீர்திருத்த வாக்குறுதிகளுக்கு பெயர் பெற்ற மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி, இதய நோய் காரணமாக திங்கட்கிழமை (ஏப்.14 2025) தனது 85 வயதில் காலமானார். “பாக் லா” என்று அழைக்கப்படும் அப்துல்லா, திடீர் நுரையீரல் பிரச்னைக்கு பின்னர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இதய நிபுணர்கள் குழுவின் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பு இருந்தபோதிலும், அவர் 2025 ஏப்ரல் 14 மாலை 7:10 மணிக்கு இறந்தார் என்று மருத்துவமனை உறுதிப்படுத்தியது. மலேசியாவின் ஐந்தாவது பிரதமரான அப்துல்லா, நீண்டகாலத் தலைவர் மகாதிர் முகமதுவுக்குப் பிறகு 2003 முதல் 2009 வரை பதவி வகித்தார்.

இஸ்லாமிய ஆய்வுகளில் ஆழமான வேர்களைக் கொண்ட ஒரு மூத்த அரசியல்வாதியான அப்துல்லா, மகாதீரின் சர்வாதிகார சகாப்தத்திற்குப் பிறகு ஆட்சிக்கு ஒரு மென்மையான தொனியைக் கொண்டு வந்தார். நவம்பர் 26, 1939 அன்று பினாங்கில் பிறந்த அப்துல்லா, தீவிர இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர், மலாயா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுகளில் பட்டம் பெற்றார். 1978 இல் அரசியலுக்கு வருவதற்கு முன்பு சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட்.. அடுத்து என்ன?பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com