Young woman found dead in Delhi: டெல்லியில், இளம்பெண்னின் உடல் புல்லட் காயங்களால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Young woman found dead in Delhi: டெல்லியில், இளம்பெண்னின் உடல் புல்லட் காயங்களால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: April 15, 2025 at 10:02 am
Updated on: April 15, 2025 at 11:18 am
டெல்லி, ஏப்.15 2025: டெல்லி ஷாதராவின் ஜிடிபி என்க்ளேவ் பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் திங்கள்கிழமை (ஏப்.15 2025) தெரிவித்தனர். இது குறித்த கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஷாதரா) நேஹா யாதவ் கூறுகையில், “சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது.
ஜிடிபி என்க்ளேவ் பகுதியில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு சுமார் 20 வயது இருக்கும். பெண்ணின் உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்றார். இதற்கிடையில், அந்தப் பெண்ணின் அடையாளம் இன்னும் தெரியவில்லை என்றும் உடல்கூராய்வு பரிசோதனைக்குப் பிறகு கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
இதே மாவட்டத்தில் விவேக் விஹாரின் சத்யம் என்க்ளேவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2025 மா்ர்ச் 29ஆம் தேதியன்று அழுகிய நிலையில் பெண்ணின் உடல் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வீடு விவேகானந்த் மிஸ்ராவுக்கு சொந்தமானது, அவருக்கு சுமார் 50 வயதுக்கு மேல் இருக்கும். எனினும், பெண்ணின் உடல் யார் என்பது குறித்தும், கொலையாளிகள் குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 8 பேர் கைது, இருவர் தலைமறைவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com