இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டில் 2வது முறையாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டில் 2வது முறையாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on: November 17, 2024 at 2:21 pm
Israel | இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே ஓராண்டாக போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், வடக்கு நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி நேற்று (சனிக்கிழமை) இரண்டு ஃப்ளாஷ் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் “அனைத்து ரெட் லைனையும் தாண்டிவிட்டது” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு இல்லை, ஃப்ளாஷ் வெடிகுண்டு நெதன்யாகுவின் வீட்டின் தோட்டத்தில் விழுந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 2வது முறையாக கொல்ல சதி நடந்துள்ளது. இதனால் பிரதமர் வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் உஷாராக உள்ளனர் என பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க காசாவில் இஸ்ரேல் தாக்குதல் ; 17 பேர் உயிரிழப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com