Donald Trump imposes 25 percent tariff on India: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதம் விதித்துள்ள நிலையில் இது யாருக்கு பிரச்னை என்பது குறித்து பார்க்கலாம்.
Donald Trump imposes 25 percent tariff on India: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதம் விதித்துள்ள நிலையில் இது யாருக்கு பிரச்னை என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: August 1, 2025 at 9:48 am
நியூயார்க், ஆகஸ்ட் 01 2025: ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில், இந்தியப் பொருள்களுக்கு 25 சதவீத பரஸ்பர வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.
மேலும், ரஷ்ய நாட்டில் இருந்து வாங்கும் பொருள்களுக்கு குறிப்பிடப்படாத அபராதமும் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பின் இந்த அறிவிப்பு, ஜவுளித் துறை முதல் மருந்துகள் வரை பல துறைகளை சேதப்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எந்தெந்த பொருள்களுக்கு ஆபத்து?
மருந்துப் பொருள்கள்
ஆண்டுக்கு தோராயமாக $8 பில்லியன் மதிப்புள்ள காப்புரிமை பெறாத மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடு இந்தியா. அந்த வகையில், இது மிகப்பெரிய அளவில் பிரச்னையை ஏற்படுத்தும்.
இதற்கிடையில், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் மற்றும் சிப்லா லிமிடெட் உள்ளிட்ட இந்தியாவின் சில பெரிய நிறுவனங்களின் பங்குகள் வியாழக்கிழமை (ஜூலை 30 2025) சரிந்தன.
ஜவுளித்துறை
இந்திய ஜவுளித்துறை வால்மார்ட் இன்க்., தி கேப் இன்க்., பெப்பே ஜீன்ஸ் மற்றும் காஸ்ட்கோ ஹோல்சேல் கார்ப் உள்ளிட்ட மிகப்பெரிய அமெரிக்க சில்லறை விற்பனையாளர்களுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்கிறார்கள்.
அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பால் இத்துறைகள் பிரச்னையை எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது. இதற்கிடையில், வர்த்மேன் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் போன்ற ஜவுளி நிறுவனங்களின் பங்குகள் ஆறு சதவீதமும், வெல்ஸ்பன் லிவிங் லிமிடெட் 6.5 சதவீதமும், இந்தோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 7.4 சதவீதமும் சரிந்தன.
மற்ற துறைகள்
இவை தவிர எண்ணெய் சுத்திகரிப்பு, எலக்ட்ரானிக் பொருள்கள், ஆட்டோ பொருள்கள், ஜூவல்லரி மற்றும் விலையுயர்ந்த கல் மற்றும் முத்து ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளும் பிரச்னையை எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க : பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கிறோம்; பிரான்ஸ் அதிபர் அதிரடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com