Curfews lifted in Nepals: நேபாள அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 29 2025) ஊரடங்கு உத்தரவை நீக்கினர். இதனால், அப்பகுதிகளில் பதற்றம் தணிது காணப்படுகிறது.
Curfews lifted in Nepals: நேபாள அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 29 2025) ஊரடங்கு உத்தரவை நீக்கினர். இதனால், அப்பகுதிகளில் பதற்றம் தணிது காணப்படுகிறது.
Published on: March 29, 2025 at 4:19 pm
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மன்னராட்சி ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், தலைநகரின் டின்குனே பகுதியில் மன்னராட்சி ஆதரவு போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது, அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகம் தாக்கப்பட்டது.
மேலும், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் காத்மாண்டின் பல்வேறு பகுதிகளில் காலையில் பதற்றமான சூழல் காணப்பட்டது. இதற்கிடையில், இந்த மோதலில் ஒரு தொலைக்காட்சி கேமராமேன் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.
இது மட்டுமின்றி 110 பேர் காயமடைந்தனர். இதற்கிடையில், நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 28 2025) நடந்த வன்முறை ஆர்ப்பாட்டத்தின் போது 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை எரித்தல் மற்றும் வாகனங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேபாளத்தில் மன்னராட்சி மற்றும் இந்து ராஜ்ஜியத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
நேபாளத்தின் அரசியல் கட்சிகள் 2008 ஆம் ஆண்டு 240 ஆண்டுகால முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்தன. தொடர்ந்து, நேபாளம் மதச்சார்பற்ற, கூட்டாட்சி, ஜனநாயகக் குடியரசாக மாறியது.
இந்த நிலையில், மீண்டும் மன்னராட்சிக்கு ஆதரவாக கோரிக்கைகள் எழுந்தன. இந்தக் கோரிக்கையை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், நேபாள தலைநகர் காத்மாண்டில் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் மன்னராட்சி கோரிக்கை போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் சிலர் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2125ல் ஏலியன்கள் இந்த நாட்டுக்கு வருவார்கள்: பாபா வங்கா கணிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com