16 Naxalites killed in encounter: சத்தீஸ்கரில் 16 நக்சலைட்டுகள் இன்று (மார்ச் 29, 2025) சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் காயமுற்றனர்.
16 Naxalites killed in encounter: சத்தீஸ்கரில் 16 நக்சலைட்டுகள் இன்று (மார்ச் 29, 2025) சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் காயமுற்றனர்.
Published on: March 29, 2025 at 4:05 pm
ராய்ப்பூர், மார்ச் 29 2025: ராய்ப்பூருக்கு தெற்கே சுமார் 480 கி.மீ தொலைவில் கோகுண்டா மலைப்பாங்கான வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனபகுதிக்கு அருகில் சுக்மா-தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையே இன்று (மார்ச் 29 2025) காலை பாதுகாப்பு படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில், நக்சலைட்டுகள் 16 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்த மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறுகையில், இதுவரை 16 மாவோயிஸ்ட்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று முதல் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
இன்று காலை கெர்லாபால் காவல் நிலைய எல்லைக்குள் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. நவீன ஆயுதங்கள், வெடிபொருட்களும் மீட்கப்பட்டன. இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது என்றார்.
இந்த மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆயுதக் குழுவினரின் கூட்டுக் குழுவில் சுக்மா மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்டில் ஐ.இ.டி மீட்பு
இதற்கிடையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட கிராமத்தின் வனப்பகுதியிலிருந்து பாதுகாப்புப் படையினர் 28 ஐஇடி குண்டுகளை காவல் அதிகாரிகள் மீட்டனர். இது சம்பவ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : கேரள கோவிலில் மீண்டும் சைவ முதலை: பக்தர்கள் இன்ப அதிர்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com