ஜெருசலேம், செப்.22, 2025: இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை ஒருதலைப்பட்சமாக அங்கீகரிப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை பிராந்தியத்தை ஸ்திரமின்மைக்கு ஆளாக்கும் என்றும் அமைதியான தீர்வுக்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த வாரம் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை “பாலஸ்தீன அரசை” அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தன. இதற்கிடையில், பிரான்ஸ் போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்திற்கு முறையான மாநில அந்தஸ்து அங்கீகாரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா தலைவர்களுக்கு அனுப்பிய செய்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன நாடு இருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.
அதில், “அக்டோபர் 7 அன்று நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு எனக்கு ஒரு தெளிவான செய்தி உள்ளது.
நீங்கள் பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதியை வழங்குகிறீர்கள். மேலும் உங்களுக்கு இன்னொரு செய்தியும் உள்ளது. அது நடக்காது. ஜோர்டான் நதிக்கு மேற்கே எந்த பாலஸ்தீன அரசும் நிறுவப்படாது” என்றார்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் குஜராத் பெண் சுட்டுக்கொலை.. 21 வயது குற்றவாளி கைது!
Donald Trump : ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தண்டனை அளிக்கும் என எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்….
Bangladesh: வங்கதேசத்தின் நவ்காவன் மாவட்டத்தில் ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்….
Donald Trump: “தாம் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்….
Former Bangladesh PM Begum Khaleda Zia in Dhaka: வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நல்லடக்க நிகழ்வில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்…
Khaleda Zia passes away: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா இன்று (டிச.29, 2025) காலை காலமானார்; அவருக்கு வயது 80….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்