வங்கதேச ஏரியில் சடலமாக மிதந்த பெண் பத்திரிகையாளர்: ஃபைசலுடன் என்ன பிரச்னை

Bengali journalist dead in Bangladesh | வங்க சேத்தில் உள்ள ஏரியில் பெங்காலி பத்திரிகையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Published on: August 28, 2024 at 8:04 pm

Bengali journalist dead in Bangladesh | வங்க தேசத்தில் உள்ள ஏரி ஒன்றில் இருந்து 32 வயது பெண் பத்திரிகையாளரின் சடலம் புதன்கிழமை (ஆக.28, 2024) மீட்கப்பட்டது. இதனை உள்ளூர் ஊடகங்கள் செய்தி வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளன.
சடலமாக மீட்கப்பட்ட செய்தியாளர் சாரா ரஹனுமா ஆவார். இவர், பெங்காலி சேனல் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

புதன்கிழமை அதிகாலை டாக்காவின் ஹதிர்ஜீல் ஏரியில் ரஹனுமா பேச்சு மூச்சு இன்றி கிடந்தார். அவரை மீட்ட அப்பகுதிவாசி மருத்துவமனை கொண்டு சென்றார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக கூறினார்.
இதற்கிடையில், மருத்துவமனை போலீஸ் அவுட்போஸ்ட்டின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் பச்சு மியா, அவரது உடல் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

இறப்பதற்கு முன், ரஹனுமா செவ்வாய்க்கிழமை இரவு தனது பேஸ்புக் பக்கத்தில் இரண்டு பதிவுகள் செய்துள்ளார். அதில் ஒன்று, “#ஃபைசல்.. மரணத்திற்கு ஒத்த வாழ்க்கையை வாழ்வதை விட இறப்பது சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது பதிவில் அவளும் பைசலும் வங்கதேசக் கொடியின் பந்தனாக்களை அணிந்திருக்கும் படங்கள் இருந்தன.

இரவு ரஹனுமாவின் பேஸ்புக் போஸ்டுக்கு ஃபகிம் ஃபைசல், “”நான் சந்தித்த சிறந்த நண்பர் நீங்கள் தான், இந்த நட்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்து கொள்ளாதீர்கள்” என்று கமெண்ட் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க போச்சு எல்லாம் போச்சு.. ஷேக் ஹசீனாவை விசாரிக்க போகும் தீர்ப்பாயம்: யார் அமைத்தது தெரியுமா?

வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com